Thursday 23 April 2020

சாலையோரம்


சாலையோரம்
இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.  இந்த கிழக்குக் கடற்கரைச் சாலையும் அதிலிருந்து பிரியும் பட்டுக்கோட்டை சாலையும் மறக்க முடியாது.  அதிராம்பட்டினத்திலிருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பட்டுக்கோட்டை.  அதிராம்பட்டினத்து இளைஞர்கள் பழச்சாறு அருந்துவதாக இருந்தாலும்  பட்டுக்கோட்டைக்குத்தான் செல்வார்கள்.  அதற்குக் காரணம் அதிராம்பட்டினத்தில் பழச்சாறு கடையே இல்லை என்று கூற முடியாது.  எந்தப் பொருளாக இருந்தாலும் அதைப் பட்டுக்கோட்டை போய்தான் வாங்க வேண்டும் என்ற மோகமே எனலாம்.  இரவு பத்து மணிவரை இந்த சாலையில் வாகனங்கள் பறந்தவண்ணம் இருக்கும். அதிராம்பட்டினத்து இளைஞர்கள் மைனர் மேஜர் என்று எல்லாரும்  இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத பலரும் இருசக்கர வாகனத்தில் சாலையில் டயர் படாமலே பறப்பதும் அடிக்கடி 108 வருவதும் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் படுப்பதும் அன்றாடம் நடக்கும் வாடிக்கையாகிவிட்டது.
     ஊர் பெரியவர்களும் முக்கியப் பிரமுகர்களும் பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த பேசிய வார்த்தைகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராயின என்னிடம் கூட அதிராம்படினத்துக் காவலர் ஒருவர் இளைஞர்கள் வேகமாக வாகனத்தில் செல்வதால் ஏற்படும் உயிர் சேதம் பற்றி நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார். என்ன செய்வது, எனக்குத் தெரிந்த ஓர் இளைஞர் கூட தான் ஓசியாகப் பெற்ற இருசக்கர வாகனத்தில் விரைந்து சென்று பரபரப்பு மிகுந்த சாலையில் வயதான ஒருவர் மீது மோதி அவர் உயிருக்குப் போராடி பிறகு உயிரைவிட்ட நிகழ்வு கூட இன்று என் நினைவுக்கு எட்டுகிறது.  எத்தனையோ சாலைவிதிகள் இருப்பினும் அவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்ற மனநிலை நம்மிடையே இல்லாதது வருத்தத்தைத் தருகிறது.
     சென்ற ஆண்டு இப்படித்தான் என் சகோதரிக்கு உடல்நலக்குறைவு என்று தகவல் வரவே நானும் காலை பத்து மணிக்கெல்லாம் தஞ்சாவூருக்குச் சென்று விட்டேன்.  மருத்துவனையிலிருந்து எப்போது புறப்படுவேன் என்று தெரியாததால் பேருந்தைத் தவிர்த்து என் இருசக்கர வாகனத்திலேயே சென்றிருந்தேன்.  அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் என்று வழக்கமாக நான் செல்லும் சாலைதைன்.  இந்த வழியில் எத்தனை வலைவுகள் எத்தனை வேகத்தடைகள், எந்தெந்த இடங்களில் சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பெரிய பள்ளங்கள், எங்கெங்கு நீண்டபஞ்சர் போடப்பட்ட சாலை என அனைத்தும் எனக்கு அத்துப்படிதான்.  அதனால் நான் செல்லும்பொழுது இருபுறமும் இருக்கும் வயல்வெளிகளையும் மரங்களையும் ரசித்துக்கொண்டே செல்வதுதான் என் வழக்கம்.  ஆனால் என் சகோதரிக்கு உடல்நலம் நலிவடைந்துள்ள இந்த நேரத்தில் இயற்கையை ரசித்துச் செல்வதற்கும் செல்போனில் பாட்டுக் கேட்டுச் செல்வதற்கும் மனம் இடம் தரவில்லை.  பதட்டம் நிறைந்த மனநிலையில் இது சாத்தியப்படாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
     மருத்துவமனையில் ஏற்பட்ட பரபரப்பு என்னைக் கடிகாரத்தைக் கூட பார்க்கவிடவில்லை.  எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே இரவு பதினொரு மணிக்குத்தான் ஏற்பட்டது.  அதன் பிறகே எனது இருசக்கர வாகனத்தில் தஞ்சைக்கு விடை கொடுத்துவிட்டும் மருத்துவமனைக்கு நன்றி கூறிவிட்டும் புறப்பட்டேன்.  இப்பொழுது தனித்துவிடப்பட்ட இருளில் தனியனாய் ஒரே ஒரு இருசக்கர வாகன முகப்பு வெளிச்சத்தை நம்பி நான் பயணத்தைத் தொடர்ந்தேன்.
    என்னை எந்த வாகனம் கடந்து செல்லாத போது நான் மட்டும் சாலையோரம் தலையசைத்துக்கொண்டிருந்த மரங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். 

Tuesday 14 April 2020

சிறுகதை



தாய்
முனைவர் ஆ. அஜ்முதீன், எம்.ஏ., பி.எட்., எஸ்.எல்.இ.டி., பிஎச்.டி., 
முதுகலை தமிழாசிரியர், பிஜிடிஇடி,. சிடி,. சிஎம்,. சிஜிடி,.

இறந்தவர்களை அடக்கம் செய்யும் அந்த இடத்தைப் பள்ளிக்கொல்லை என்று அழைப்பது தான் எங்கள் ஊர் வழக்கம்.  நான்கு புறமும் சுற்றுச்சுவர் நடுவில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வருகிறவர்களுக்கான ஒரே ஒரு  பாதை மட்டும் அங்கு உண்டு.
     யாருமில்லா அந்த இடத்தில் சிகப்புநிற பெண் நாய் ஒன்று வந்து தங்கியது.  ஓரிரு நாட்களில் அது மூன்று குட்டிகளை ஈன்றது.  மனிதர்கள் யாரும் வராத இடமாகையால் அதற்கும் அதன் குட்டிகளுக்கும் அதைவிட பாதுகாப்பான இடம் வேறு இருக்க முடியாது என்று அது கருதியது.
     தற்பொழுதுதான் மழை பொழிந்த இடமாகையால் அந்த இடம் முழுவதும் பச்சைபசேல் என்று புல்தரையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படாத மரங்கள் பசுமையாக காட்சி தந்து நிற்பதும் அந்த இடத்திற்கு அழகை அதிகமாக்கின.  இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படும் என்று ஆற்று மணல் மாட்டு வண்டிகளில் கொண்டுவரப்பட்டு ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தது.  அந்த மணல் குவியலின் ஓரத்தில் பழைய பயன்படாத மரப்பலகைகளும் கட்டைகளும் கொட்டிக்கிடந்தன. அவற்றின் ஓரத்தில் அந்த நாய் பள்ளம்தோண்டி தான் படுக்கும் அளவிற்கும் தன்பிள்ளைகள் தங்கும் அளவிற்கும் ஏற்றவாறு ஒரு வீட்டை தனது கால்களாலேயே கட்டி முடித்தது. அந்த அறையிலிருந்து ஒரு வாரத்திற்கு தனது பிள்ளைகளை விட்டுப் பிரியாது உணவின்றி கண்ணும் கருத்துமாக அவற்றை அந்த நாய் காத்து வந்தது.  மிகுந்த பசி எடுக்கும் வேளைகளில் தனது பிள்ளைகளைத் தனது கால்களால் தட்டிக்கொடுத்தும் தன் நாவினால் வருடி விட்டும் தூங்க வைத்துவிட்டு உணவுத் தேடிச் செல்லும். உணவு கிடைக்கும் வரை அது சுற்றினாலும் அதனுடைய மனம் முழுக்க தனது குட்டிகளின் எண்ணமே ஓடிக்கொண்டிருக்கும்.  குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு குழந்தை விழிக்கும் முன் கடைக்குச் சென்று திரும்ப வேண்டுமே என்று பதைபதைக்கும் ஒரு தாயின் உள்ளம் போல் அது உணவுக்காக அழையும்.  வழக்கம் போல் கிடைத்ததை உண்டு  மனிதர்களின் கல்லடிகளுக்குத் தப்பி தன் குட்டிகளை காணும் வரை அந்த நாய் படும்பாடும் அதன் மனம் பதைபதைக்கும் நிலையையும் நம்மால் உணர முடியாது.   அந்தக் கடவுளே அறிவான். 
நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன.  குட்டிகளின் வளர்ச்சி தாய்க்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. மூன்று குட்டிகளும் முத்தான சத்தான அழகான குட்டிகள்.  பாரதி பாடினானே “சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி” அதனைப் போன்று ஒரு குட்டி. அது பெண் குட்டியும் கூட. ஏனைய இரண்டில் ஒன்று ஆரஞ்ச் நிறத்தில் இருந்தது. மூன்றாவது குட்டி அமைத்திக்குப் பெயர் பெற்ற வெள்ளை நிறம்.  முதுகுப்புறம் மட்டும் தன் சகோதரனின் ஆரஞ்ச் நிறத்தை வட்டமாய் பெற்றது.  மூன்றும் அந்தப் பள்ளத்தில் படுத்துறங்கும் காட்சி அழகானது.
வளர்ச்சி அவற்றை அந்த பள்ளத்தில் தங்கவிடவில்லை.  வெளியுலகைக்காண மூன்றும் ஆவல் கொண்டன வெளியே வந்தன. மணல் மேட்டில் தாய் படுத்திருக்க அதன் மேல் ஏறி குட்டிகள் விளையாடின.  மணல் குவியலின் உயரத்திற்குச் சென்று தள்ளாடி தள்ளாடி உருண்டு தரைக்கு வந்தன.  ஒன்றின் வாலை மற்றொன்று பிடித்து இழுத்து வம்பு செய்தன.  அவற்றின் விளையாட்டுக்களைக் காணும் தாய் நாய்க்கு ஆனந்த களிப்பு வெளிப்படும்.  அவ்வப்போது சண்டையிடும் குட்டிகளைத் தனது அழுத்தமான குரலால் பயமுறுத்தும்.  ஆனால் அவற்றைக் கடிக்காது.
 தாய் அருகில் இருக்கும் தைரியத்தில் அவற்றின் விளையாட்டுக்கள் அதிமாயின.  மணல் குவியலை விடுத்து புல் தரைக்கு ஒன்றை ஒன்று விரட்டிக் கொண்டு ஓடின.  ஆரஞ்ச் சாம்பலை விரட்டும் சாம்பல் வெள்ளையனை விரட்டும்.  மீண்டும் தமது தாயின் அருகில் வந்து அவை அமரும்.  முதலில் யார் வந்து தாயைத் தொடுகிறார்களோ அவர்களுக்கே தாயின் முகர்தல் கிடைக்கும்.
இப்பொழுது தாய்நாய்க்கு தன்னம்பிக்கை அதிகமானது.  தன்பிள்ளைகள் ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும்போது நமக்கு என்ன கவலை தைரியமாக உணவு தேடிச்செல்லலாம் என்று அது வெளியுலகைக் காண புறப்பட்டது.  நன்றாக உணவு தின்று விட்டு  மீண்டும் தன் வீட்டிற்கு ஓடி வரும்.  தன் குழந்தைகள் நிம்மதியாய் தூங்குவதைக் கண்டு பெருமூச்சு விட்டு அவற்றிற்கு அருகில் சென்று படுக்கும்.
இவ்வாறு சில நாட்கள் நகர்ந்தன.  அன்று அந்த நாய்க்குப் பகலில் பசி எடுத்தது.  தன் பிள்ளைகளை விளையாட வைத்து விட்டு அவற்றிற்குத் தெரியாமல் அந்தப் பள்ளிக்கொல்லையை விட்டு பக்கத்தில் இருக்கும் தெருவிற்கு உணவு தேடச் சென்றது.  அன்று விடுமுறை தினமாகையால்  தெருவில் சிறுவர்களின் விளையாட்டுக்கள் அதிகமாகவே இருந்தன.  அவர்களின் கண்ணில் படாமல் தெருவின் முக்கைத் தாண்டி திரும்புகையில் அருகில் இருக்கும் வீட்டிலிருந்து பழைய சோறு கொட்டப்படுவதைக் கண்டு ஓடிச்சென்று சாப்பிட்டது.  அது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எதிர் வீட்டுப் படிக்கட்டில் இரண்டு வயதுக்குழந்தை கால் தடுமாறி தவறி விழுந்தது.  அந்தக் குழந்தையின் அழுகையைக்கண்டதும் நாய்க்கு உள்மனது ஏதோ சொல்ல அந்த சோகம் தாளாமல் நாய் குரைத்தது.  அந்தக் குழந்தையின் தாய் ஓடி வந்து குழந்தையை வாரி எடுத்தாள்.  தன் பிஞ்சுக் குழந்தையின் அழுகையை நிறுத்த முத்தமழைப் பொழிந்தாள்.  குழந்தை சிரித்தது.  நாயின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க தனது குட்டிகளைக் காணப் புறப்பட்டது.
இந்த நேரத்தில் தான் பள்ளிக்கொல்லையில் பத்து இளைஞர்கள் தமது கைகளில் தடிக் கம்புகளை எடுத்துக்கொண்டு வெறிபிடித்தவர்கள் போல் நுழைந்தனர்.  அவர்களின் வருகையைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த நாய்க்குட்டிகள் திசைக்கு ஒன்றாய் ஓடின.  வெள்ளைக்குட்டி மாத்திரம் தனது வீடாகிய அந்தப் பள்ளத்திற்குள் சென்று பதுங்கியது.  மற்றவை இரண்டும் ஓடிக்கொண்டிருந்தன.  இளைஞர்கள் கூட்டம் இரு குழுவாகப் பிரிந்தனர்.  ஐந்துபேர் கொண்ட கும்பலில் ஒருவன் தனது கையில் வைத்திருந்தக் கட்டைக் கம்பினை எடுத்து வீச அது சாம்பல் நிறக்குட்டியின் முதுகில் பட்டது.  உடனே அந்தக் குட்டி துடிதுடித்துக் கத்த மற்றொரு இளைஞன் தனது கையில் உள்ள கம்பால் ஓங்கி அடித்தான்.   இதுவரையிலும் அப்படி ஒரு அடியைப் பெற்றிறாத அந்த சாம்பல் நிறக்குட்டி நிலைகுழைந்தது.  அதனது முக்கலும் நின்றது முனகலும் நின்றது.  தனது கண் முன்னால் தனது சகோதரியைக் கொல்லும் அந்த இளைஞர்களைக் காவிநிற நாய்க்குட்டி பார்த்தது.  அதனால் குரைக்கக்கூட முடியவில்லை.  அதன் கண்களில் உயிர் பயம்.  இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற உறுதியோடு ஓடியது.  அவர்களிடமிருந்தா தப்பிக்க முடியும் அரையடி நீளமே உள்ள அந்த பிஞ்சுக்கால்களால் எவ்வளவு தூரம் ஓட முடியும்.  இளைஞன் ஒருவன் வீசிய அரைச்செங்கல் அதன் கால்களை ஒடித்தது.  அடிப்பட்ட அந்தக்குட்டியால் அதற்குமேல் நகர முடியவில்லை.  ஒருவன் கட்டையால் ஓங்கி அதன் மண்டையில் அடித்தான். மற்றவனும் அடித்தான்.  அதனது சத்தம் முனகலானது.  அதற்குப்பின் அதன் சத்தம் நின்றது.  அதன் பார்வை மட்டும் அவர்களின் மீது இருந்தது.  அந்தப் பார்வையின் அர்த்தம் உயிர் போகும் நிலையில் அதன் துடிதுடிப்பின் நிலையை நமக்கு நிச்சயம் உணர்த்தும்.
அடிப்பட்ட இரண்டு குட்டிகளையும் தனித்தனியே அதன் கால்களில் கயிறு கொண்டு கட்டி இழுத்து வந்தனர். 
இதற்கிடையில் ஐந்து பேர் கொண்ட மற்றொரு கும்பல் வெள்ளைநிற நாய்க்குட்டியை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.  மணற்குவியலுக்குக் கீழே பள்ளம் மேல்பகுதியில் மரப்பலகைகள் நிறைய அடுக்கப்பட்டிருந்தன.  அதற்குக் கீழே தான் நாய் தனது வீட்டைக் கட்டியிருந்தது.  இளைஞர்களுக்குச் சிரமமாக இருந்தாலும் இரு இளைஞர்கள் சேர்ந்து பலகைகளை அப்புறப்படுத்தினர்.  மற்றவர்கள் அந்தப் பள்ளத்தைச் சுற்றி வளைத்து நின்றனர்.  ஒருவன் பெரிய கருங்கல்லை கையில் வைத்திருந்தான். மற்றொருவன் கயிறு வைத்திருந்தான்.  இன்னொருவன் கட்டைக்கம்பு வைத்திருந்தான்.  அவர்களின் ஆரவாரமும் கூச்சலும் பள்ளத்துக்குள் பதுங்கியிருந்த வெள்ளை நிறக்குட்டியை கதிகலங்க வைத்தது.  தன்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்ற ஏக்கமே அதற்கு அதிகம் இருந்தது.  தன் தாய் வந்துவிடுமா?  வந்தால் இந்த நிலையில் தன்னைக் கண்டால்,  இதற்குக் காரணமான இவர்கள் எல்லோரையும் தனது கூரிய பற்களைக் காட்டியும், தாங்கள் சண்டையிடும்போது அழுத்தமான குரலால் தங்களை மிரட்டுவது போல் இவர்களை பாய்ந்து விரட்டுமா என்று எண்ணியது.  அதன் எண்ணம் வீணானது.  அதன் மண்டையில் இடி விழுந்ததைப் போல ஒரு இளைஞனின் கம்பு அதன் தலையில் விழுந்தது.  அது நடுநடுங்கி பயந்து கத்தியது.  வேகவேகமாக ஒருவன் நீளக்கம்பை வைத்துக் குத்த அந்த வெள்ளைநிறக்குட்டி பள்ளத்தை விட்டு பாய்ந்து வெளியேறியது.  அதனைக் கண்ட  அந்தக்கும்பல் அதை விரட்டி ஒருவர் பின் ஒருவர் அடித்தனர்.  அது மயங்கி விழுந்தது.  உடன் ஒருகாலில் கயிற்றைக் கட்டினர்.  அந்தப் பள்ளிக்கொல்லையின் நுழைவு வாயிலில் உள்ள செட்டில்  நாய்க்குட்டிகளைக் கட்டித் தொங்கவிட்டனர்-  அவற்றின் முக்கலும் முனகலும் அவர்களின் கொலைவெறியைத் தூண்டிவிட்டன.  உடனே கட்டித் தொங்கும் நாய்க்குட்டிகளை வலிமையான கம்புகளால் ஓங்கி ஓங்கி அடித்தனர்.  அவை தெற்கிற்கும் வடக்கிற்கும் மேலும் கீழும் ஊஞ்சல் போல் ஆடின.  இதைத்தான் உயிர் ஊசலாடுகிறது என்பார்களோ எனக்குப் புரியவில்லை.  அவற்றின் வாய்களிலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது.  கயிறு அறுந்து விழும் அளவிற்கு அடித்துக்கொன்றனர்.  அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறிய மனநிறைவுடன் அங்கிருந்து அகன்றனர்.
இளைஞர்கள் சென்ற சிறிது நேரத்தில் மனம் நிறைய தன் பிள்ளைகளை நினைத்துக் கொண்டும் அவர்களுக்கு இன்று புதிய விளையாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலுடனும் தாய்நாய் அங்கு வந்தது.  சாம்பல் நிறம், காவிநிறம், வெள்ளைநிறம் அத்தனையும் இரத்த வெள்ளத்தில் சிவப்புநிறமாகக் கிடக்கும் காட்சியைக் கண்டதும் தாயின் உள்ளம் பதறியது. அட நான் பெத்த மக்கா என்ன ஆச்சு உங்களுக்கு?.  அட மனுச மக்கா ஊருக்குள்ள இருந்தா உங்க தொந்தரவு தாங்காது என்று தானே இடுகாட்டில் வந்து வீடுகட்டினேன். என் வீட்டையே சுடுகாடாக்கீட்டீகளே. உங்க குழந்தை தவறி விழுந்தா ஓடி வந்து தூக்கி கொஞ்சீனீங்களே அம்மா. எம்புள்ளைங்க கதியைப் பார்த்தீங்களா தாயே?
இந்த பிஞ்சுப்பிள்ளைகள் நான் பெத்த செல்லக்குட்டிகள் என்னை தனியே தவிக்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்களே.  அடே மனிதர்களே உங்கள் இனவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளியே கிடையாதா? என்று அந்த தாய் அழுதது.  அதன் கதறல் மெல்ல மெல்ல அடங்கியது. விலங்காய் இருந்தாலும் அதுவும் ஒரு தாய் என்பதையும் அதன் பிள்ளைகளும் உயிர்கள் தான் என்பதையும் இந்த மனித இனம் ஏன் மறந்தது.

Sunday 14 April 2019

தமிழ் வளர்ச்சியில் ​​சைவ சமயத்தின் பங்கு


தமிழ் வளர்ச்சியில் ​​சைவ சமயத்தின் பங்கு
(மு​னைவர். ​​ரெ. சந்திர​மோகன், இயற்பியல் து​றை, ஸ்ரீ​சேவுகன் அண்ணாம​லை கல்லூரி, ​ தேவ​கோட்​டை 630 303)


முன்னு​ரை
ஒரு ​மொழி வளர்ந்துள்ளது என்றால், அதற்கு முக்கியமான காரணிக​ளை ஆய்ந்து சீர்தூக்கிப் பார்த்​தோமானால், அவற்றில் முக்கியமானதாக சமயம் திகழும்.  இது அ​னைத்து ​மொழிகளுக்கும் ​பொதுவாகும்.  கல்​தோன்றி மண் ​தோன்றாக் காலத்​தே முன் ​தோன்றிய மூத்த தமிழ் ​மொழியாம் ​செம்​மொழி.  நயத்தக்க நாகரீகம்’ பற்றி ​பேசிய ​மொழி.  ‘யாதும் ஊ​ரே, யாவரும் ​கேளிர்’ என்ற ஒரு​மைப்பாடு, ‘பிறப்​பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற  ஒப்பற்ற ​செயதி, ‘யாம்​பெற்ற இன்பம் ​பெருக இவ்​வையகம்’ எனும் மாண்​பு ​போன்ற எண்ணற்ற ​செல்வங்க​ளைக் ​கொண்டது. 

இத்தமிழ் ​மொழி ​பேசும் மக்கள் இயற்​கை​யோடு இ​யைந்த வாழ்க்​கை​யை ​மேற்​கொண்டிருந்தனர் என்று உலகம் அ​னைத்தும் வியந்து ​போற்றி வருகின்றது.  தமிழ் ​​​மொழி வளர்ச்சியில் "சங்கத்தமிழ்" வளர்த்த மன்னர்கள், சங்கம் மருவிய காலம் வரையிலான பல புலவர் ​பெருமக்கள் இருந்துள்ளனர்.  சங்கத்தமிழ்க்  காலத்திற்கு முன்பும் கூட கிராமிய ​நாட்டுப்புற இலக்கியங்கள் ​செவிவழியாகத் ​தொடர்ந்து தமிழ் சமுதாயத்தில் வளர்ந்து ​செறிந்து உள்ளது.

இந்திய  மண்ணின் ​​செல்வச் சிறப்பி​னை உணர்ந்து உலக​மெங்கும் இருந்து கலை, ​செல்வம், இலக்கியம், சமயம் என அ​னைத்​துக்கும் ‘’தாயாக விளங்கிய ‘பாரதத்தில்’  இருந்து தங்கள்நாடு பலன் ​பெற வாணிகம், ப​டை​யெடுப்பு ​செய்துள்ளனர். மங்​கோலியர் வருகை, ​பெளத்தம், இசுலாம், கிருத்துவம், ​போன்ற சமயங்களின் அணிவகுப்பு என்று இந்தியா முழுதும் பல்​வேறு மாற்றங்களில் பல அற்புதப் ப​டைப்புகள் ம​றைந்து ​போயின. இதனி​டை ‘ஆடிப்​பெருக்கு’ ​போன்ற சடங்குகளில் பல சுவடிகள் அழிந்தன.  ஆயினும் அவ்வப்​போது தமிழ் ​மொழியின்  வளர்ச்சிக்கும் அ​வை உதவின.  சீறாப்புராணம், ​போப்​பையரின் திருக்குறள், திருவாசக ​‘மொழி ​பெயர்ப்புகள்’ தமிழ் ​மொழியின் வள​மை​யை உலகிற்கு பறை சாற்றின.  இக்கட்டு​ரையில் தமிழ் வளர்ச்சியில் ​​​சைவம் ஆற்றிய பங்கி​னையும், பாங்கி​னையும் காணலாம்.

​​சைவ சமயம்
            ​சைவ சமயம் என்பது முப்​பொருள்களான "பதி, பசு, பாசம்" என்ப​தை ஏற்றுக் ​கொண்ட மக்​களைக் ​கொண்டது. "சிவன்" என்ற பெய​ரையு​டைய இ​றைவன் ‘எண்குணங்கள்’ ​பெற்றவன் என்றும், அதில் உயிர்களின் ​தொகுதி​யை ‘பசு’ என்றும், அவற்றின் த​லைவன் 'பதி' - சிவன் என்றும், ‘பசு’ அனாதி​யே ‘பாசம்’ என்ற கயிற்றினால் கட்டுப் பட்டுள்ளது.  அந்தக் கயிறு முப்​பொருள்களால் ஆனது.   ‘பாசம்’ முப்​பொருள்களான ‘ஆணவம், கன்மம், மா​யை’த் ​தொகுதி​யை குறிப்பதாகவும் ஏற்றுக் ​கொண்ட மதம்[1].
​மொழிவளர்ச்சி
ஒரு ​மொழி வளர்ச்சி என்பதில் புதிய ​சொல்லாக்கம், ஒரு ​பொருட் பன்​மொழி, பல்வகைகளில் உருமாறும் ​சொற்கள், புதிய அணிகள், புதிய உருவகங்கள், மாதிரி வடிவங்கள்,  பரவசத்​தைத் தூண்டும் ​செய்திக​ளை இலகுவாக பரிமாற்றம் ​செய்ய உதவுதல் ​போன்ற​வைகள் அடங்கும்.
அவ்வ​கையில் பதி, பசு, பாசம் என்ப​தே ஒரு ​மொழி வளர்ச்சிச் சிந்த​னையாகும்.  தமிழ் ம​றை ஞானசம்பந்தனின் ​தேவாரங்கள், திருமூலரின் திருமந்திரம் ​போன்ற​வை ​தோத்திரமாகவும், மந்திரமாகவும் திருக்​கோயில்களில் பயன்படுத்தும் வ​கையில் இயற்றப்பட்ட​வைகளாகும்.
தமிழ் நாட்டில் வட​மொழியில் அர்ச்ச​னை ந​டை​பெறுவது தவிர்க்க முடியாதது என்று புலம்பும் கூட்டத்திற்குச் சவாலாக பன்னிறு திரும​றைகள் விளங்குகின்றன.  வள்ளுவரின், "கனியிருக்கக் காய் கவர்ந்தற்று" என்ற குறட்பாவிற்கு "நானறிந்த தமிழ் ​மொழியிருக்க, என் நண்பன், என் த​லைவன், என் இ​றைவனிடம் ​பேசுவதற்கு ‘சங்​கேத பா​சை’ எதற்கு. தவறாக உச்சரித்தால் தவறான வரம் கி​டைக்கலாம் தா​னே" என்பது ​போல் வள்ளுவப் ​பெருமகனார் ‘நகுதல்’ ​போன்று ​பொருள் ​கொள்ளலாம்.

"யாமறிந்த ​மொழிகளி​லே, தமிழ் ​மொழி ​போல்
இனிதாயுளது எங்கும் கா​ணோம்" என்று பன்​மொழி பண்டிதன் பாரதி பகர்ந்தது எதனா​லே என்று ஆய்ந்த​போது, பாரதியின் கவி​தைகளில் மிளிர்கின்ற சந்தம், ​பொருள், அணிகளில் கலந்திருந்த ​​சைவ ​வைணவ இலக்கிய வாசிப்புகளின் பாதிப்பு என்ப​தை பல ஆன்​றோர்கள் ஆய்ந்து பதிவு ​செய்துள்ளனர்.
இனி ‘சாஸ்திரம், ​தோத்திரம்’ தவிர இ​றைவனிடம் எப்படி இரண்டறக் கலத்தல் முடியும் என்ப​தை ‘திருவாசகம்’ கூறும் மு​றையில் எந்த நூலும் இல்​லை எனலாம்.  தமிழ் நூல்களின் வரி​சையில் அகத்தி​ணை, புறத்தி​ணை என்ற பாகுபாட்டில் அடங்காத ஒரு நூல்.  தன்​னை​யே, ​பெண்ணாகவும், ஆணாகவும் இ​றைவனின் ​தோழனாகவும், பிற ​நேரங்களில் சுய ஆய்வு ​செய்து, தன் ஆற்றா​மைக​ளைப்  புலம்பும் சக மனிதனாவும், தம்மிற் சிறந்த ஆடியார்கள், சிவ​நெறிச் ​செல்வர்கள் கூட்டத்தில் ​சேர, நாடகமாடி, ​வெற்றி ​பெற்ற ஒரு உயிரின் ‘புலம்பல்’ திருவாசகம் எனும் காவியமாகிறது.  இதற்கிடையே பல உட்க​தைகளில்  திரிபுரம் எறித்தல், தாயுமானவராய் பன்றிக்கும் கரு​ணை காட்டிய ​பெற்றியும், நரி​யைப் பரியாக்கி தமக்காக பிரம்படிபட்ட ​கொள்கையும், மணிவாசகர் ​கையாள்கின்ற யுக்தி, பல்வ​கையில் இலக்கிய வகைகளிலே​யே புது​மையாகும்[2].

திருவாசகச் சிறப்பு
"சிவபுராணம்" என்று துவக்கத்தி​லே​யே ஒரு புதிய சிந்த​னை.  "புராணம்" என்றால் ​தொன்று ​தொட்டு, பழ​மையான ஒரு க​தை ​என்று ​பொருள். அதில் க​தை மாந்தரின்​ தோற்றம், வளர்ச்சி, ஊர், அதன் சிறப்பு என்று எண்ணற்றவைகள் ​பேசப் ​பெறும்.  ஆயின் ​‘தோற்றமும், முடிவுமிலா’ இ​றைவனுக்கு புராணம் எழுதுவது ​எப்படி என்ற யுக்தி, புது​மையிலும் புது​மையாகும்.  இ​றைவன் தன்னுள் எழுந்தருளிய தருணத்​தை​யே, அவனது  தோற்றமாகவும் அவன் நீடித்து தன்னுள் இருக்கும் காலத்தில, ​தோன்றும் உணர்வுகளினால் இ​றைவன் எப்படியுள்ளான் என்ப​தை ‘பிதற்றும்’ முகமாக அருளும் 658 பாடல்க​ளை, 6 ‘வாழ்க’, 5 ​‘வெல்க’, 8 ​‘போற்றி’ என்று ‘திருவாசகம் முழு​மையின் சாராம்சத்​தை’ சிவபுராணத்தில் தந்துள்ளார்.

மனிதன் விழித்த நி​லையில் எண்ணிக்​கை ​தெரியும், ஆதனால் தான் முதன்முதலில் நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! என்று ஆரம்பித்து, ..... ஆராத இன்பம் அருளும​லை ​போற்றி! ..... என்பது வ​ரை மனத்​தை ஒருங்கி​னைத்து இறைவாழ்த்து பாடுகின்றார்.

"சிவனவன் சிந்​தையில் நின்ற அதனால்" என்ற நி​லையில் சிந்​தையில்
இ​றைவன் எழுந்தருளியவுடன், ‘முந்​தைவி​னை முழுதும் ஓய சிவபுராணம் உ​ரைப்பன்’ .... என்று பின்னர், பிதற்றல் துவங்குகிறது.

இ​றை-உயிர்க் கலவியில், ‘பிதற்ற​லை’ நூல் முழுக்கக் ​கொண்டு ​செல்கின்றார்.  ‘திருவம்மா​னை, திருஊஞ்சல் திருத்​தெள​ளேணம், திருவுந்தி’ ​யென்ற மகளிர்
வி​ளையாட்டுகளில் பயன்படுத்தும் ​சொற்கள், ​பொருள், உவமம் என்று பல்வ​கையில் தமிழ் ​மொழிக்கு அணி ​செய்யும் அற்புதத் திருப்பாட்டுக்கள் திருவாசகமாய் ‘மலர்ந்திருக்கின்றன’.

கோயில் திருப்பதிகம் ஏழாம் பாடலில்,
"இன்​றெனக்கருளி இருள் கடிந்து உள்ளத்
​தெழுகின்ற ஞாயி​றே ​போன்று
நின்ற நின் தன்​மை   நி​னைப்பற நி​னைந்​தேன் 
நீயலால் பிறிது மற்றின்​மை
​சென்று ​சென்று அணுவாய்த் ​தேய்ந்து ​ ​தேய்ந்​தொன்றாம்
திருப்​பெருந்து​றை சிவ​னே
ஒன்று  நீ அல்​லை யன்றி ஒன்றில்​லை 
யாருன்​னை அறியகிற்பா​ரே"
இத் திருப்பாடலில்  இ​றைவன் ‘எங்குமாய், எல்லாமாய், என்றுமாய்’ இருக்கும் தன்​மை​யை விளக்கும் மணிவாகசர், இரண்டு உவ​மைக​ளைக் ​கையாள்கின்றார்.  இ​வைகள் படிப்பவர் உள்ளத்தின் ​மேன்​மை​யைப் ​பொருத்து சிறந்த ​பொருள்க​ளைத் தரும்.  சூரியன் முன் விளக்​கொளி காரியப்படாது  அடங்கி நிற்றல் ​போலவும்’, ‘த​லைவியும் த​லைவனும் கூடல் நுகர்ச்சியின் ​போது உணர்வற்று இருப்பது​ போலவும்’ என்று உவமிக்கின்றார்[3].  இத​னை​யே, ‘உணராமல் உணர்வது, உணர்வதால் உணராதது’ என்றும் ​கொள்ளலாம். இது​போன்று ‘நுட்பமான’ ​செய்திக​ளை திருவாசகம் எங்கும் காணலாம்.

பிற சான்றுகள்
தமிழ்ச்சங்கத்தின் ‘த​லைவனாக’க் ​கொண்டும், ‘தமிழ்க்குமரனாக’ முருகப் ​பெருமா​னையும் ​கொண்டு, இ​றைவனுக்கும் ​​மொழிக்குமான ‘​தொடர்​பை’ ​​சைவ சமயம் தந்தது ​போல் பிற மதங்கள் தந்ததில்​லை.
"ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!" "ம​கேந்திரமதனிற் ​சொன்ன ஆகமம் ​தோற்றுவித்து அருளியும்", "மூவா நான்ம​றை முதல்வா ​போற்றி" என்று ‘அறம், ​பொருள், இன்பம், வீடு’ என்ற ‘நான்ம​றைகள்’ இ​றைவனிடம் இருந்து ​தோன்றிய​வை என்றும் அ​வைகளின் விளக்கமாய் ‘சிவஆகமங்கள்’ ​தோன்றியுள்ளன என்றும் மணிவாசகர் கூறுகிறார்.  அதனால்தான் இன்றும் ‘திருவாசகம் முற்​றோதுதல்’ நிகழ்வுகள் நிகழ்ந்து ​கொண்டுள்ளன.  பன்னிரு திருமு​றைகள் மட்டுமின்றி ‘சந்தானக் குரவர்கள்’ இயற்றிய பல ‘ஞானப் ​பொக்கிசங்கள்’ தமிழ் ​மொழிக்கு ​மேலும் வளம் ​சேர்த்துள்ளன.
இக்கால கவிஞர்களும்[4], திருவாசத்தின் பாதிப்பு இல்லாமல் எழுத முடியாத நிலையில் தமிழ்​​மொழிக்குப்  ​பெருவள​மை​யைச் ​சேர்த்திருக்கின்றார் மணிவாசகர்.

ஞானசம்பந்தர் பாடல்களில், மூர்த்தி, தலம், கீர்த்தி, 8வது பாடலில் இராவணன்,  10 புறச்சமயத் தாழ்வு நி​லை, 11ஆம் பாடலில் திருக்க​டைக்காப்பு என்ற கட்ட​மைப்பு உள்ளது.   ஆனால் திருநாவுக்கரச​ரோ, மூர்த்தி, தலம், கீர்த்தி, ஆனால் 9இல் புறச்சமயச் சாடல் இல்லாத நி​லையில், (6வது பாடலில்  இராவணன்),10ஆம் பாட​லையும், இராவணனுக்கு இ​றைவன் அருளிய திறத்​தைப் பாடுகின்றார்.  சமண சமயத்திலிருந்து வந்ததாலும், தன் வயதிற்கு யா​ரையும் பழித்துப் ​பேசல் கூடாது என்பதாலும், திருமண​மே ​செய்து ​கொள்ளாமல் வாழ்ந்த நாவுக்கரசர்,  பிறர் மாதர் ​மேல் பற்று ​வைத்த இராவ​ண மன்னனுக்கும் இ​றைவன் அருளிய​தை மிகப் ​​பெரும்  பேற்றாகவும் ​கொண்டு தம் திருமு​றைக​ளை அ​மைத்த பாங்கு தமிழுக்குப் பெரிதும் வளம் ​சேர்த்துள்ளன.

திருமூலர், வட​மொழியிலிருந்து மந்திரங்கள், சாத்திரங்கள் முதலியவற்​றைத் தமிழில் அற்புதமாய் ​செய்துள்ளார்.
"மரத்​தை ம​றைத்தது மாமத யா​னை
மரத்தில் ம​றைந்தது மாமத யா​னை
பரத்​தை ம​றைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் ம​றைந்தது பார்முதல் பூதம்"
என்ற வ​கையில் பகுதி, விகுதி மாற்றத்தில் அற்புதமான ​செய்திக​ளை ஒழித்து இயற்றிய பாடல்கள் பல ​மொழிக்கு வளம் ​சேர்க்கின்றன.

தமிழரின் அக்கால வாழ்விய​லை அப்படி​யே சித்தரித்துக் காட்டும் ​பெரிய புராணம், தமிழ் ​மொழிக்கு ஒரு மகுடமாகும்.  சாதி, சமய பிணக்குக​ளைக் கடந்து, பக்தி ​வைராக்யம் ஒன்​றை​யை பிரதானமாகக் ​கொண்டு வாழ்ந்த அடியார் பற்றிய ஆற்புத வரலாற்று நூல்.  இ​றைவ​னே அடி​யெடுத்துக் ​கொடுத்தது உண்​மை என்பது இத​னைப் படிப்​போருக்கு நிச்சயம் உணர்த்தும் நூல் இது.  மனிதனாய், நண்பனாய், தலைவனாய், குழந்​தையாய், ஆணாய், கற்ப​னை ​செய்து, இலக்கியம் ​செய்யலாம்.  ஆனால் தன்​னைப் ​பேயாய்ப் பாவித்து, அப்​பொழுதும் கூட இ​றைவ​னை​யே நினைத்து வாழும் ஒரு ஆத்மா பயன்படுத்தும் ​சொற்களால் ‘புது​மையாக’ எழுதப்பட்டது ‘கா​ரைக்கால் அ​ம்​மையாரின் திருமு​றை’.  எண்ணற்ற ​செய்திகள் சந்தங்கள், ஆவியுலகக் காட்சிகள், என்ற அற்புதமான உலகினும் ‘தமிழ் ​மொழி பயன் ​பெறும்’ என்று இத் திருமு​றை கூறுகின்றது.

முடிவு​ரை
மேற்குறிப்பிட்ட ​இவற்றுடன் உலக ​சைவசித்தாந்த மாநாடு, திருமந்திர மாநாடு, திருக்குறள் ​பேர​வை, ​சைவத் ​தொண்டு முதலிய எண்ணற்ற ​தொண்டுக​ளை திருவாவடுது​றை, தருமபுரம் ஆதீனங்கள் பல அறிய தமிழ்ப்பணி ​செய்வ​தை நாம் நினைவு கூறலாம்.   ஒரு ​மொழியின் வளர்ச்சியில் சமயம் ​பெரும் பங்கு வகிப்பது உண்மை​​யே[5].  உருது  ​மொழிக்குக் குரான், கி​ரேக்க பாரசீக ஆங்கில ​மொழிக்கு ​பைபிள், எகிப்தின் குனேபார்ம், சீன ​செளராஸ்ட்ர இத்தாலி ஹீப்ரு ​மொழிகளில் வளர்ச்சியிலும் ‘சமயம்’ ​பெரிதும் உதவியுள்ளது உண்​மை​யே.  அது​போன்​றே தமிழ் ​மொழி வளர்ச்சிக்கும்  பல ‘சமயங்கள்’, பல சமயங்களில் உதவியதும் உண்​மை​யே.  ஆயினும் ‘​சைவ சமயம்’ தமிழ் ​மொழி வளர்ச்சியில் ஆற்றிய பங்கிற்கு நிகராக பிறி​தொன்று  ​செய்ததில்​லை என்பது உள்ளங்​கை ​​நெல்லிக்கனியாகும்.

-------------





[1] ​சைவ சமய வரலாறு, கு.​வைத்தயநாதன், திருவாவடுது​றை ஆதீன ​​சைவசித்தாந்த பயிற்சி நூல்.
[2] புதிய ​நோக்கில் திருவாசகம், தமிழண்ணல்
[3] திருவாசகம் குருவருள் விளக்கம் - உ​​ரை, தண்டபாணி ​தேசிகர், விக்கிரமசிங்கபுரம். ஆதீனப் பதிப்பு
[4] ​தேசியம் வளர்த்த தமிழ், கா. திரவியம், பூம்புகார் பிரசுரம், ​சென்​னை
[5] Mario Pei, George Allen & Unmin Ltd., (1965) London Page 206-15.